விரைவில் டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் - பின்னணி என்ன? அமைச்சர் பரபரப்பு பேட்டி!
DMK Govt MK Stalin Delhi trip
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் டெல்லி செல்லஉள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லும் போதெல்லாம் நீட் விலக்கு பற்றி வலியுறுத்தி வருகிறார்.
நீட் விலக்கு பற்றி தொடர்ந்து வலியுறுத்தும் அரசு தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டிற்கு கூடுதலாக மானியம் தரவில்லை என்றாலும் உரிய மானியத்தையாவது மத்திய அரசு தர வேண்டும். நீட் தேர்வு மசோதா குறித்து 4வது முறையாக மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி கேட்டுள்ளது.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மட்டும் ஏன் விலக்கு கேட்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கேள்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உரிய விளக்கம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியதில் ஒரு கோப்பு மட்டும் நிலுவையில் உள்ளது. ஆன்லைன் ரம்மி சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.
தமிழ்நாட்டில் பாழடைந்து, மூடப்பட்டுள்ள சிறைச்சாலைகளை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வருவோம். புதிய சிறைச்சாலைகள் துவக்கப்படும் என்று சொல்லவில்லை.
எந்தெந்த சிறைகள் மிகவும் மோசமான, பழுதடைந்த நிலையில் சிறைவாசிகளை வைக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறதோ, அவற்றை புதுப்பித்து சிறைவாசிகள் தங்குவதற்கான வசதிகளை உருவாக்கி தருவோம்.
ஆன்லைன் ரம்மிக்கும், ரம்மிக்கும் உள்ள வேறுபாடுகளை சரியாக விளக்கினோம், ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் புரிந்துகொள்ளும் அளவிற்கு விளக்க முடியவில்லை.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குவோம். மற்ற மாநிலங்களில் இருந்து ஆன்லைன் ரம்மிக்கு விளம்பரங்கள் கொடுக்கும் போது தமிழ்நாட்டில் இருந்து கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு அரசு அவற்றை ஊக்குவிப்பது கிடையாது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
English Summary
DMK Govt MK Stalin Delhi trip