மணிப்பூர் வன்கொடுமை! மோடி என்ன செய்கிறார்? கொந்தளித்த கனிமொழி!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை தாங்கினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் "பாஜக இந்த நாட்டை வன்முறையின் பக்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது. மக்களை ஜாதி ரீதியாக மதம் ரீதியாக பிரித்தாலும் அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்கள். பாஜக ஆட்சி செய்யும் ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற சம்பவங்களை தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மணிப்பூரில் உலகில் உள்ள அனைவரின் மனதையும் உலுக்கக்கூடிய வகையில் நினைத்து கூட பார்க்க முடியாத வகையிலான வன்கொடுமை நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மிகப் பெருமையாக மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி என பெருமையாக சொல்லிக் கொள்வார். ஆனால் மணிப்பூர் மக்களிடையே கலவரம் வெடித்துள்ளது. ஒரே நாளில் கலவரம் வெடித்து விடாது. 

ஆண்டாண்டு காலமாக மணிப்பூரில் பிரச்சனை இருந்து வருகிறது. அனைவரையும் சமாதானம் செய்து அமைதி நிலவும் நேரத்தில் அங்கு பாஜக ஆட்சி அமைந்தது. மணிப்பூர் மாநில முதல்வர் குகி மக்களையும், நாகா மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இதனால் ஏற்பட்ட வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக வன்கொடுமை அரங்கேறுகிறது. 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது மவுனத்தை கலைக்கிறார். அங்கே இருக்கும் தேசிய மகளிர் ஆணையத்திற்கு இந்த செய்தி தெரிந்துள்ளது. அனைவரும் இந்த சம்பவம் தொடர்பாக மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த சம்பவம் குறித்தான வீடியோ வெளியாகும் வரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாத அரசாங்கம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஆட்சியில் இருப்பவர்கள் தலை குனிந்து பதவி விலக வேண்டும்" என ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK kanimozhi criticized PMModi in manipur violence issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->