ஹெச்.ராஜா சிறை தண்டனை நிறுத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


திமுக எம்.பி., கனிமொழியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கு மற்றும், பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய வழக்கில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் தரக்குறைவாக கருத்து கூறியதாக தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கும், பெரியார் சிலையை உடைப்பேன் என பேசிய வழக்கில், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, எச் ராஜா குற்றவாளி என்று அறிவித்து, இரு வழக்குகளில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், தீர்ப்பை எதிர்த்து எச் ராஜா மேல்முறையீடு செய்ய (கைது நடவடிக்கையை தவிர்க்க) கால அவகாசம் வழங்கும் வகையில், சிறைத்தண்டனையை தற்போது நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK KaniMozhi MP BJP H Raja


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->