விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் திமுக முன்னிலை..!! - Seithipunal
Seithipunal



விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் வந்த முதல் வாக்கே கையெழுத்து இல்லாமல் செல்லா வாக்காக இருந்தது. 

தொடர்ந்து நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி 10 வாக்குகள் பெற்றிருந்தார். மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றிருந்தார். 

இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் இரண்டாம் சுற்றிலும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 12, 002 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாமிடத்தில் பாமக 5, 904 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 849 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளார். மேலும் நோட்டாவில் 78 வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மொத்தம் 20 சுற்றுக்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இரண்டாம் சுற்று முடிவிலும் திமுக 6, 098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் திமுக தொண்டர்கள் இப்போதே உற்சாகத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே கொண்டாட்டத்திற்காக திரண்டுள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் மொத்தமாக 14 மேசைகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Leads in Second Round Counting in Vikravandi ByElection


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->