#BigBreaking || இரு நகராட்சி பறிபோனது - திமுகவை வீழ்த்திய சுயேச்சை வேட்பாளர்கள்.! பின்புலமாக இருந்த அரசியல் கட்சி யார் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


குமாரபாளைம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவை வீட்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், அதிமுகவின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளரை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சத்தியசீலன் 15 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் விஜய கண்ணன் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  

இதேபோல், செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ராமலட்சுமி வெற்றிபெற்றுள்ளார்.

செங்கோட்டை நகராட்சி மொத்தமுள்ள 24 இடங்களில், அதிமுக 10 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும், பாஜக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பாக களமிறக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் ராமலட்சுமி அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk los in two municipality


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->