மாணவி பாலியல் வன்கொடுமை : அமைச்சர் கோவி.செழியன் முக்கிய விளக்கம் ? - Seithipunal
Seithipunal


வெகுவிரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் நிறுத்தப்படுவர் என்றும் , தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை அரசியலாக்க விரும்புகிறார்கள் என்று அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவியும், மாணவர் ஒருவரும், நேற்று வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 நபர்கள், மாணவரை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் இது தொடர்பாக தி.மு.க அரசின் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். “ கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

 தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் .கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தி.மு.க ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk minister explanation sexual abuse


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->