தமிழ் நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு! சிக்கலில் சிக்கிய திமுக அமைச்சர்! பதவியை பறிக்க CM ஸ்டாலினுக்கு பாஜக நெருக்கடி!
DMK Minister MRK Panneer Selvam Controversy speech BJP Condemn
பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கக்கூடாது என்று பல அமைச்சர்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
பொன்முடியை தொடர்ந்து, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதி திருமுட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், நடிகைகள் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்றோரை விஜயுடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஏன்? உதயநிதி ஸ்டாலின் கூட பல படங்களில் கதாநாயகனாக(?) நடித்துள்ள(?) நிலையில் அவர் குறித்து விமர்சனம் செய்தால் பொறுத்துக்கொள்வீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே?
மீண்டும் மீண்டும் பெண்களை கொச்சையாக பேசுவதையே வாடிக்கையாக்கி கொண்டு விட்டார்கள் திராவிட மாடல் அமைச்சர்கள்.
பொன்முடியை நீக்கியது போல் பன்னீர் செல்வத்தையும் நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
DMK Minister MRK Panneer Selvam Controversy speech BJP Condemn