ரைட்டு விடு! திமுகவின் பெரும் புள்ளிக்கு சீட் காலி...?! அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி! - Seithipunal
Seithipunal


அண்மையில் நடந்த தமிழக அமைச்சரவை மாற்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்மொடியின் இலாகா பறிக்கப்பட்டு, அவருக்கு வனத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது. 

இந்த நிலையில், வருகின்றார் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் போகலாம் என்று, பொன்முடி பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் திமுக அலுவலகத்தில் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வானத்தை அமைச்சர் பொன்முடி பேசியதாவது,

"வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் ஒரு வேலை எனக்கு சீட்டு கிடைக்காமல் போகலாம். அதனால், திமுக வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும், எதிர்த்து யார் நின்றாலும், திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் நம் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். 

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடுவார்கள். இதில், யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். 

நம் தலைவர் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ, அவர்தான் நம் கண் முன் தெரிய வேண்டுமே தவிர, வேறு எதுவும் நம் கண் முன் தெரிய கூடாது. நம் தலைவரின் உணர்வோடு நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கழகத்திற்காக பணியாற்ற வேண்டும்" என்று பொன்முடி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister speech Vilupuram MK Stalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->