லேபிள் ஒட்டும் வேலை செய்வதா? பாதி முடிந்த சுரங்கப்பாதை பணிக்கு அடிக்கல் நாட்டிய திமுக அமைச்சர்கள்! - Seithipunal
Seithipunal


2018ல் தொடங்கி பாதி முடிந்த திட்டத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டிய திமுக அமைச்சர்கள்!

ராயபுரம் சட்டமன்ற தொகுதி 53வது வட்டம் போஜராஜா நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முயற்சியினால் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் தென்னக ரயில்வே மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து சுரங்க பாதை அமைக்கும் பணியை கடந்த 2018 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.

அந்த சுரங்க பதிவு பணியானது 50 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது திமுக அமைச்சர்கள் அதே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டத்தினை மீண்டும் தொடங்கி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாண்புமிகு அம்மா அரசில் (2018) என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட ராயபுரம் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அடிக்கல் நாட்டை லேபிள் ஒட்டும் வேலை செய்வதா???" என ஜெயக்குமார் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தான் தொடங்கி வைத்த இத்திட்டத்திற்கு மீன்ட் மார்ட்டன் சிட்டி குடியிருப்பு நல சங்கம் சார்பில் வாழ்த்தி அமைக்கப்பட்ட பேனரின் போட்டோ மற்றும் அவர் ஆய்வு செய்த புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்து உள்ளார். 

கடந்த 10 ஆண்டுகள் நடந்த அதிமுக ஆட்சியின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திரும்பவும் ஆரம்பிக்கவே திமுக ஆட்சியின் 5 ஆண்டுகள் போதாது என நிட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Ministers laid the foundation stone again for the project started in admk period


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->