அதிமுகவின் தொடர் தோல்வி! புளுகு மூட்டை, கரப்பான் பூச்சி.. இபிஎஸ்-ன் ஆணவம்! கிழித்தெடுத்த முதல்வர் ஸ்டாலின்!
DMK MK Stalin Condemn to ADMK EPS
இன்று விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், நிகழ்ச்சியில் பேசியதாவது,
"மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது.
ஒருவர் பொய் சொல்லலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது. 'இனி பழனிச்சாமி அளவிற்கு பொய் சொல்லக்கூடாது' என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி பழமொழி சொல்லும் அளவிற்கு புளுகு மூட்டையை எடப்பாடி பழனிச்சாமி அவிழ்த்து விடுகிறார். ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது மக்களின் நலன் பற்றி சற்றும் எடப்பாடி பழனிச்சாமி யோசிக்கவில்லை.
மக்களுக்கு பயன்படாத திட்டங்களை கருணாநிதி பேரில் தொடங்குவதாக எடப்பாடி பழனி செல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உளறியதை பார்த்தபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது.
தமிழகத்திற்காக 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞரின் பெயரை மக்கள் நலத்திட்டங்களுக்கு வைக்காமல், வேறு யார் பெயரை வைப்பது? பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி மாதிரி ஊர்ந்து போனீங்களே உங்கள் பெயரை வைக்க முடியுமா?
உங்கள் ஆணவத்திற்காக நீங்கள் தொடர்ந்து தோல்வியை கண்டு வருகிறீர்கள். உங்கள் ஆணவத்திற்காக தமிழக மக்கள் இனிமேல் உங்களை தோற்கடிக்க தான் செய்வார்கள்.
நம்மை முந்தி வெற்றி அடைய பல பேர் வந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டை உயர்த்த எனது சக்தியை மீறி உழைப்பேன். இன்னும் வேகமாக ஓட வேண்டும் நாம். இன்னும் சிறப்பாக வேலை செய்ய வேண்டும்" என்று, முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
DMK MK Stalin Condemn to ADMK EPS