அழிவை நோக்கி திமுக! வைரலாகும் வீடியோ - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திமுக எம்.பி வில்சன் பேசிய வார்த்தைகள், திமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ஜெயக்குமார் தெரிவிக்கையில், அராஜகத்தின் உச்சகட்டமாக திமுக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், கருணாநிதி முதல் தற்போதைய திமுக எம்.பி வில்சன் வரை நீதிமன்றத்தை அவமதித்து பேசுவது திமுகவினருக்கு புதிதான ஒன்று அல்ல.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான வழக்கு ஒன்றில் ஆஜரான திமுக எம்பி வில்சன் பேசிய பேச்சு, ஜனநாயக நாட்டில் நீதிமன்றம், பத்திரிக்கை என எதுவும் இல்லாதது போல் இருக்கிறது, இது திமுகவினருக்கு அழிவை நோக்கி செல்லக்கூடிய காலம்.

இன்று காந்தி ஜெயந்தி, ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவினர் கலந்து கொள்வது, ஜீவகாருண்ய மாநாட்டில் கசாப்பு கடைக்காரன் கலந்து கொண்டது போல இருக்கிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய்  பணிகள் செய்து வரும் ஸ்டாலின் அரசு, முறையாக அந்த பணிகளை மேற்கொள்ளவில்லை. குண்டும் குழியுமாக வடிகால்வாய்கள் பணிகளை மேற்கொள்வதால் மழை நீர் முறையாக வெளியேறுவதற்கு போதிய வசதி இல்லாமல் தேங்கி கிடைக்கிறது. பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்வது அறிவுள்ள அரசாங்கத்துக்கு சான்றா? என்று டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin DMK MP ADMK Jayakumar High Court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->