திமுக பவள விழாவில் AI மூலம் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய கருணாநிதி!
DMK MK Stalin Mupperum Vizha AI Karunanidhi
இன்று சென்னையில் நடைபெற்று வரும் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில், AI மூலம் முதல்வர் ஸ்டாலினை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழ்ந்து பேசிய காணொளி வைரலாகி வருகிறது.
ஓவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட தினம் என மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது.
இதில், விழா மேடைக்கு முன்பாக இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டு, அதில் ஒரு நார்காலியில் AI மூலம் கருணாநிதியும், மற்றும் ஒரு நார்காலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்தனர்.
மேலும், நாற்காலியில் அமர்ந்தபடியே AI மூலம் கருணாநிதி திமுகவின் சாதனைகளையும், முதல்வர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசும்படி திமுகவினர் அமைத்து விழாவை சிறப்பித்துள்ளனர்.
English Summary
DMK MK Stalin Mupperum Vizha AI Karunanidhi