பேச்சுக்கே இடமில்லை - இனி பதவி பறிப்பு தான்! அலறவிட்ட முக ஸ்டாலினின் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


இன்று  நடைப்பெற்று வரும் திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

கருணாநிதிக்கு நாணயம் வெளியிட உள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்ததாக, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன். தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம், சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சி தான்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும். 

அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர். கவுன்சிலர்கள் மீது புகார் வந்தால் அவர்களின் பதவியை பறிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அமைச்சர்கள் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும் புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Say About US trip and 2026 election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->