ஆறாத வடு, ஆற்றுப்படுத்த முடியாத துயரம் - வீடியோ வெளியிட்டு மரியாதை செலுத்தியும் முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


ஆறாத வடுவென, ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு என்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்த அவரின் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையெல்லாம் பட்டியலிட்டு - அதன் வரலாற்றைச் சொன்னால், தலைவர் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்!

ஆறாத வடுவென - ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு!

இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வுகொண்டிருக்கும் கடற்கரைக்கு உடன்பிறப்புகள் சென்று, “அவர் காட்டிய வழிதனில் - அவர் கட்டிய படை பீடுநடை போடும்; தமிழும் தமிழ்நாடும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்!” என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அவருக்கு மலர் தூவி மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக மூத்த தலைவர்கள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

மேலும் திமுக சார்பில் சென்னை மெரினா பகுதிகள் அமைதிப் பேரணி ஒன்றும் நடைபெற்றது இந்த பேரணியில் திமுக தலைவர், முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin tribute to Karunanidhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->