பொங்கல் பரிசு ரூ.1000 கொடுத்தா ஜெயிச்சிருக்கலாம்.. ஸ்டாலினை சீண்டிய திமுக எம்.எல்.ஏ வால் அதிர்ச்சி.!
dmk mla about pongal gift
வழக்கமாக பொங்கல் பண்டிகை என்றாலே அதிமுக ஆட்சி நடைபெற்ற வரை கரும்பு துண்டு, பொங்கல் தொகுப்பு, ரூ.2000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தபின் இந்த தொகை நிறுத்தப்படும் என்பது பொதுமக்களால் எதிர்பாராத ஒரு விஷயமாகும்.
சமீபத்தில் பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மக்களுக்கு ரொக்கப்பரிசு எதுவும் கொடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல்கள் மற்றும் கோரிக்கைகளும் எழுருந்தது. இருப்பினும், பரிசு தொகை கொடுக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் சீர்காழி திமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் மேடையில் பேசிய பொழுது, "24 வார்டுகளில் சீர்காழி நகராட்சியில் நமது வேட்பாளர்களை நிறுத்த தலைமை முடிவு எடுத்துள்ளது.
இந்த வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் செயல்படக்கூடாது. திமுகவை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக நின்றாலும், அவர்களை ஆதரிக்க கூடாது. இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும். எனவே வேட்பாளரின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்.
பொதுமக்கள் எதிர்பார்த்தது போல பொங்கல் பரிசாக வெறும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு கொடுத்திருந்தால் கூட நாம் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். தற்போது நாம் கடுமையாக உழைக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்." என்று தெரிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக அமைந்தது.
English Summary
dmk mla about pongal gift