அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகள்., அதிர்ச்சியில் திமுக வட்டாரம்.! என்னப்பா இது சோதனை., - Seithipunal
Seithipunal


அண்மையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியது. 

மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசுக்கு நேற்று நோய்த்தொற்று உறுதியாகியது. இன்று காலை பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்புவிற்கு நோய்த்தொற்று உறுதியாகியது.

மேலும் இன்று, வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமை படுத்துக்கொண்டு, கொரோனா நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், விருதுநகர் சட்டப்பேரவை திமுக எம்எல்ஏ., ஏ ஆர் ஆர் சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர் காய்ச்சல் இருந்து வந்த நிலையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் மீசலூர் அருகே உள்ள அழகாபுரியில் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுகவை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் தொடர்ந்து கொரோனவால் பாதிக்கப்பட்டு வருவது, திமுக தொண்டர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Srinivasan AFFECTED CORONA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->