ஆ.ராசா வழக்கு! அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
DMK MP A Rasa Case CBI Court order to ED
திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில், 2022-ம் ஆண்டு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்ட காலத்தில், ஆ.ராசா தனது வருமானத்தைவிட 579% அதிகமாக ரூ.5.53 கோடி மதிப்பில் சொத்துக் குவித்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.
மேலும், இதில் ஆ.ராசா மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஆ.ராசா மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை தொடங்கக் கூடாது என கோரி திமுக எம்பி ஆ. ராசா மனுதாக்கல் செய்திருந்தார்.
இத்தனை இன்று விசாரணை செய்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஆ. ராசா மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டது.
English Summary
DMK MP A Rasa Case CBI Court order to ED