நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், நாளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

வழக்கின் விசாரணைக்காக எம்எல்ஏ எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி ஆஜராக உள்ளார்.

வழக்கும், பின்னணியும்:

கடந்த மக்களவை பொதுத் தேர்தல் என்பது தேமுதிக வேட்பாளரை ஆதரித்து மத்திய தென்சென்னை பகுதிகள் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, தயாநிதி மாறன் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் கிட்டதட்ட 75 சதவீத நிதியை செலவே செய்யவில்லை’ என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக எம்பி தயாநிதிமாறன், எடப்பாடி பழனிச்சாமி சொன்னது உண்மைக்கு புறம்பானது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உள்ள நற்பெயருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியில் சுமார் ரூ.17 கோடியில் ரூ.17 லட்சம்தான் மீதம் உள்ளது. நான் 95 சதவீதத்திற்கு மேல் என் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்துள்ளேன். 

எனவே, அவதூறு பரப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுத்து அவரைத் தண்டிக்க வேண்டும் என்று தயாநிதிமாறன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் எம்பி எம்எல்ஏ வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலைகள், நாளை இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Dayanidhi Maran vs ADMK edappadi palanisamy case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->