ஒரே நாடு, ஒரே தேர்தல் - சிறப்பு கூட்டத்தொடர்! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 16ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\

முக்கியமாக ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் அல்லது அவையை முடக்கும் வகையில் திமுக எம்.பி.க்கள் கடும் கண்டன கூழாங்கல்லை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல், மணிப்பூர் விவகாரம், பாஜக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவையில் திமுக எம்பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும், இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mp meet duraimurugan cmstalin chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->