நீங்க உண்மையிலே முட்டாளா..?? அண்ணாமலையை சீண்டும் தர்மபுரி எம்பி..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டி உள்ள விலை உயர்ந்த வாட்ச் எங்கிருந்து வந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் ஆடுகின்ற பணத்தில் வாட்ச் வாங்கப்பட்டதா..?! அதற்கான ரசீது உள்ளதா..?? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை "நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பே கடந்த 2021ல் ரஃபேல் கடிகாரத்தை வாங்கினேன். அதற்கான ரசீது என்னிடம் உள்ளது. 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கண்டுபிடித்தால் எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். அதேபோல் வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா..?? என சவால் விடுத்திருந்தார்.

இதற்கு திமுகவைச் சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு டவுட்டு🤔.., நீங்க உண்மையிலே முட்டாளா, இல்ல முட்டல் போன்று நடிக்கிறீங்களா.

திமுக அமைச்சர்கள்/MP/MLA வருமான விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இந்த basic கூட தெரியாதா. தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் தெறியும், Ooh ok நம்ம தான் BL Santosh direct appointee ஆச்சே" என விமர்சனம் செய்து உள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Senthilkumar ask to Annamalai Are you really stupid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->