டிக்..டிக்..டிக் பயந்துட்டியா.. மல...!! அண்ணாமலையை கலாய்த்த திமுக நிர்வாகி..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத தமிழக பாஜகவில் தற்பொழுது அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம் திமுக பாஜகவினர்களிடையே கடும் வார்த்தை போரை உண்டாக்கியது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நான் ஒரு தேசியவாதி எனவே ரஃபேல் விமானத்திற்கு இணையாக இருக்கும் வாட்சை வாங்கி கட்டியுள்ளேன். ரஃபேல் நிறுவனத்தின் வாட்சுகளை இந்தியன் தான் வாங்குவான். நான் ஒரு தேசியவாதி பிரிவினைவாதி இல்லை" என பேசி இருந்தார்.

இதற்கு திமுக தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாட்ச் வாங்கியதற்கான ரசீதை கேட்டிருந்தார். அதேபோன்று திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி ரஃபேல் வாட்ச் கட்டி தேசபக்தியை நிரூபிக்க அண்ணாமலையை அணுகலாம். குறிப்பாக புரோக்கர் கமிஷன் உண்டு என விமர்சனம் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அதற்கான ரசீது தன்னிடம் உள்ளதாகவும் வரும் ஏப்ரல் மாதம் ரசீதுடன் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் கோவை மாவட்ட பெரிய கடைவீதியை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரான சி.எம்.எஸ் மசூது சார்பில் லங்கா கார்னர் உட்பட கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் "டிக்..டிக்..டிக் பயந்துட்டியா... மல" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சுட்டிக்காட்டி கலாய்த்துள்ளார். திமுக நிர்வாகியின் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK poster criticizing Annamalai in Coimbatore goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->