குறிப்பு : புரோக்கர் கமிஷன் கட்டாயம்..!! அண்ணாமலையை கலாய்த்த ராஜீவ் காந்தி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்பொழுது அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத தமிழக பாஜகவில் தற்பொழுது அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம் திமுக பாஜகவினர்களிடையே கடும் வார்த்தை போரை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "நான் ஒரு தேசியவாதி எனவே ரபேல் விமானத்திற்கு இணையாக இருக்கும் வாட்சை வாங்கி கட்டியுள்ளேன். ரபேல் நிறுவனத்தின் வாட்ச்சுகளை இந்தியன் தான் வாங்குவான். நான் ஒரு தேசியவாதி பிரிவினைவாதி இல்லை" என பேசி இருந்தார்.

இந்த நிலையில் திமுகவின் தற்போதைய மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "இந்திய மக்களே நீங்கள் தேசபக்தராக புனிதம் பெற அந்நிய நாடு சுவிட்சர்லாந்து ஒரு அறிய வாய்ப்பை கொடுத்துள்ளது! 4.40 லட்சம் பணம் இருந்தால் போதும் ஒரு ரஃபேல் வாட்ச் வாங்கி புனிதபட்டம் பெறலாம்! தொடர்புக்கு அண்ணாமலை, கமலாலயம்,சென்னை குறிப்பு;புரோக்கர் கமிஷன் கட்டாயம்! என அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Rajiv Gandhi criticized TMBJP president Annamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->