நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பழி வாங்குகிறார்.!! ஆர்.எஸ் பாரதியின் பரபரப்பு குற்றச்சாட்டு.!!
DMK RSBharati accused Justice Ananda Venkatesh taking revenge
சென்னையில் இன்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்களை தாமாக முன் வந்து விசாரிக்கின்ற முடிவினை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்து விற்பது குறித்து பெரிதாக செய்திகளாக வெளியிடப்பட்டு திமுக மீதும், திமுக ஆட்சி மீதும் ஒரு களங்கம் ஏற்படுத்தக்கூடிய நிலை உண்டாகியுள்ளது.
திமுகவுக்கு பொருத்தவரை நீதிமன்றத்தின் மீது அளவு கடந்த மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. நீதிமன்றத்தின் மூலம் பல வெற்றிகளை பெற்றுள்ள இயக்கம் என்றால் அது திமுக மட்டும் தான். கடந்த ஒரு வார காலமாக ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிப்பதாக அறிவிப்புகளை பார்த்து உள்ளோம்.
அந்த வழக்குகளை எல்லாம் திமுக சந்திப்பதற்கு தயாராக இருந்தாலும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எவ்வாறு பழிவாங்கப்பட்டார்கள் என்பது நாடறிந்த உண்மை. கீழமை நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர் அமர்வின் முன்பு கடந்த 2018ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கை அப்போது விசாரணை நடத்திய நீதி அரசர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற வரை சென்ற எடப்பாடி பழனிசாமியின் வழக்கு மீண்டும் ஆனந்த வெங்கடேஷ் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
இதே நீதிபதி தான் வெறும் 44 லட்சம் ரூபாய் ஊழல் வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை 44 லட்சம் ரூபாய்க்காக செலவிடுவேன் என சொல்கிறார். அதேபோன்று பொன்முடி வழக்கில் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்ற நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பல கட்டங்களாக விசாரணை பெற்று அவர் விடுவிக்கப்பட்டதை இன்று ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.
அதேபோன்று தங்கம் தென்னரசு மீதான 74 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை உயர்நீதிமன்றம் தனது பொன்னான நேரத்தை வீணடித்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் நிச்சயமாக எடுத்து சொல்வோம். அதேபோன்று ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி சொத்து குவிப்பு வழக்குகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்களோ அதன் அடிப்படையில் தான் இவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளனர். நீதிமன்றத்திற்கு தாமாக முன் வந்து விசாரணை செய்ய அதிகாரம் உள்ளது ஆனால் பழிவாங்கும் நோக்கோடு அது இருக்கக் கூடாது. ஆனால் நீதிபதியின் செயல் அவ்வாறு அமைந்துள்ளது. இதையெல்லாம் எடுத்து கூறி உச்ச நீதிமன்றத்தில் நிச்சயமாக நாங்கள் வாதாடுவோம். இவர் எடுத்திருக்கும் இந்த முடிவை உச்ச நீதிமன்றம் நிச்சயமாக தள்ளுபடி செய்யும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK RSBharati accused Justice Ananda Venkatesh taking revenge