செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பா? நீதிபதி பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கு மற்றும் அமலாக்கத் துறையின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இன்று காலை இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலமாக நேரில் ஆஜராகினார். 

அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி கார்த்திகேயன், உச்ச நீதிமன்றத்தின் அந்த நிபந்தனை ஜாமின் உத்தரவு நகல் உங்களிடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி, எனக்கு இன்னும் அந்த நகல் வரவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பில் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் அதனை நிறுத்தி வைப்பதாக தெரிவித்து வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கின் பிரதான  வழக்கில் சாட்சி ஆஜராகாததால் அந்த வழக்கு விசாரணையை வருகின்ற 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Senthilbalaji Case Chennai Court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->