#BREAKING :: சர்ச்சை கிளப்பிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடி நீக்கம்.. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை உண்டாக்கியது. இதனை அடுத்து தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தமிழக பாஜக சார்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜிகிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் "சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Speaker Sivaji Krishnamurthy suspended from party


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->