திமுக-விசிக பிளவு?....ஆளும் கட்சிக்கு நாங்கள் நெருடலை தரவில்லை!...போட்டுடைத்த திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், மது ஒழிப்பினை பொது பிரச்சினையாக எண்ணிப் பார்க்கத் தெரியாத  அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு கருத்தை கூறினால், அதை அரசியலாகத்தான் இருக்கும் என்று முடிவு எடுத்துக் கொள்கிறார்கள் என்றும், நான் இப்போது சிக்கலான புள்ளியில் நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், மது ஒழிப்பை 100 சதவீத தூய நோக்கத்தோடு, சமூகப் பொறுப்போடு தொலைநோக்கு பார்வையோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி கையில் எடுத்திருப்பதாக தெரிவித்த அவர், கூட்டணி கட்சியாக இருந்தாலும் பிரச்சினைகளை நாங்கள் துணிந்து பேசுவோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஈழத் தமிழர்களுக்காக அதிமுகவோடு பயணித்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள். ஆனால் திமுகவோடு இணைந்து பயணிப்பது என முடிவெடுத்து அதன் கூட்டணியில் பயணித்ததாகவும், ஆளும் கட்சிக்கு நெருடலை தரக்கூடிய வகையில் நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை என்று விளக்கம் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK VCK split We are not giving trouble to the ruling party Thirumavalavan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->