என் மேல குற்றம் சாட்டாதீங்க....வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்....நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமனற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, 'மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, எடப்பாடி பழனிசாமி மீது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில்  இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேலு முன்பு ஆஜரான எடப்பாடி பழனிசாமி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not blame me Judges who adjourned the case What happened


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->