அம்பேத்கர் வேணும்!...ஆளுநர் வேண்டாமா?...நடிகர் சரத்குமார் விஜய்க்கு சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த மாதம் 27-ம் தேதி  நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்,  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் பேசி உள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், விஜய் கூறியது போல் நானும் உச்சநடிகராக இருக்கும் பொழுது தான் அரசியலுக்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், பொது மக்கள் சேவைக்காக நான் அரசியலுக்கு வந்தேன் என்றும், மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்ததாக தெரிவித்துள்ள அவர், எதுவும் சாத்தியம் என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து புரிதல் இல்லாததால் தான் அவற்றை வேண்டாம் என்று  விஜய் பேசி உள்ளதாக தெரிவித்த அவர், அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்துள்ள  விஜய் அரசியல் சாசனத்தில் உள்ள ஆளுநர் பதவியை எப்படி வேண்டாம் என்று  சொல்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you want ambedkar do not you want a governor actor sarathkumar vijay is bombarded with questions


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->