#வீடியோ | தருமபுரியில் தடுத்து நிறுத்தப்பட்ட அன்புமணி இராமதாஸ்.! இன்ப அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய மக்கள்.! - Seithipunal
Seithipunal



தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி, மூன்று நாட்கள் நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இரண்டாம் நாள் பிரச்சாரத்தினை இன்று மேற்கொண்டு வருகிறார். 

இறுதியாக தருமபுரி நகரத்தில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், அதன் பிறகு தொடர்ந்து சாலையில் நடக்கத் தொடங்கினார். அவர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது, இடையே குறுக்கிட்ட இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், அன்புமணியின் நடைப்பயணத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக உறுதி அளித்தனர்.

அன்புமணிக்கு மாலை பொன்னாடை அணிவித்து மரியாதையும் செய்தனர். பின்னர் அன்புமணியுடன் இணைந்து நடை பயணத்தில் பங்கேற்று கலந்து கொண்டனர். 

கடந்த இரண்டு நாட்களாக பலதரப்பட்ட மக்களும் ஆதரவளித்து வரும் நிலையில், தற்போது இஸ்லாமிய அமைப்புகள் தானாக வந்து ஆதரவளித்து நடைபயணத்தில் கலந்து கொண்டிருப்பது அன்புமணி பயணத்திற்கு கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Dharmapuri Cauvery Campaign Islam People Support


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->