சுட்டிக்காட்டிய அன்புமணி இராமதாஸ் - அடுத்த 5 நாளில் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


மழைக்கால பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள  அரசு பள்ளிகளுக்கு ரூ.119.27 கோடி  மானியம் ஒதுக்கீடு செய்திருப்பதற்கு, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் 37,387 அரசு பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு பணிகள் மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக  ரூ.119.27 கோடி மானியத்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடனேயே இந்த மானியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாகியும் மானியம் வழங்கப்படவில்லை என்பதை கடந்த 28-ஆம் தேதி சுட்டிக்காட்டியிருந்தேன். அதைத் தொடர்ந்து மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை செய்து கொடுக்க இந்த நிதி உதவும்.  இந்த நிதியை பள்ளி நிர்வாகங்கள் பொறுப்புடனும், அவசியத் தேவைகளுக்காகவும் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Happy For TNGovt Announce 1112022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->