தொடர் சாவுகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா தமிழக அரசு? - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலி... தொடர் சாவுகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா தமிழக அரசு? என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை அம்பத்தூரில் மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  அவரது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்!

காவலர் சரவணக்குமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாகவும்,  அதில் பெரும்பணத்தை இழந்து லட்சக்கணக்கில் கடனாளியானதாகவும், அதிலிருந்து மீள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதை விட பெருங்கொடுமை  இருக்க முடியாது!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு,  கடந்த 9 மாதங்களில் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு உயிரிழப்பும் மனதை கலங்கச் செய்கிறது. ஆனால், அரசோ கலங்காமல்  வேடிக்கை பார்க்கிறது!

தமிழ்நாட்டில் இனியும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால் அது திமுக அரசுக்குத் தான் தீராப்பழியை ஏற்படுத்தும். எனவே, இனியும் மேல்முறையீட்டை நம்பிக்கொண்டிருக்காமல், திருத்தப்பட்ட  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை  அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say about Chennai cop suicide issue may


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->