மணிகண்டன் மரணம்: தவறு செய்த காவலர்களை கைது செய்ய வேண்டும் - டாக்டர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,! - Seithipunal
Seithipunal


காவல்நிலைய விசாரணையால் மாணவர் மணிகண்டன் மரண விவகாரத்தில், தவறு செய்த காவலர்களை கைது செய்ய வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமகவின் இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்  செல்லப்பட்டு  கடுமையான காயங்களுடன் வீடு திரும்பிய மணிகண்டன் என்ற மாணவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்  என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது!

காவல்நிலையத்தில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது தான்  மாணவர் மணிகண்டனின் மரணத்திற்கு காரணமாகும். மக்களைக் காக்க வேண்டிய காவலர்களே விசாரணை என்ற பெயரில் உயிரிழப்பை ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்!

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு  ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர் மணிகண்டனின்  குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Manikandan Dead


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->