கனிமவளக் கடத்தல் : செய்தி சேகரிக்க சென்ற ’நியூஸ் தமிழ் 24x7’ ஊடகத்திற்கு மிரட்டல் - அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
Dr Anbumani Ramadoss Say About news tamil 24 7 channel issue
கனிமவளக் கடத்தல் பற்றி செய்தி சேகரித்த குழுவினர் மிரட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது: ஊடக சுதந்திரத்தை காக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனிம வளங்கள் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற ’நியூஸ் தமிழ் 24x7’ செய்தி குழுவினரை கனிமவளக் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் மிரட்டி, தாக்க முயன்றிருப்பது கண்டிக்கத்தக்கது!
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக புகார் கொடுத்த சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டதற்கு அடுத்த சில நாட்களில் இந்த நிகழ்வு நடந்திருப்பது கவலையளிக்கிறது. சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் துணிச்சல் பெற்றிருப்பதையே இது காட்டுகிறது. இது நல்லதல்ல.
ஊடகக் குழுவினரை மிரட்டியவர்களையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையினரும் உறுதி செய்ய வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About news tamil 24 7 channel issue