இனியும் தயக்கம் ஏன்? அவசர சட்டம் கோரும் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மாணவர் தற்கொலை முயற்சி : மக்களைக் காக்க அரசுக்கு மனம் இல்லையா? என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டம் ஆத்தூர் சதாசிவபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சூரிய பிரகாஷ் ஆன்லைன்  சூதாட்டத்தில் ரூ.75,000 இழந்ததால் நஞ்சு குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரது நிலைமை ஆபத்தான கட்டத்தில் உள்ளது.

சூரியபிரகாஷ் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக வைத்திருந்த பணத்தை  சூதாடி இழந்திருக்கிறார் என்பதிலிருந்து  ஆன்லைன் சூதாட்டம் மாணவர்களையும் அடிமையாக்கியுள்ளது; கல்லூரி கட்டணத்திற்கான பணத்தை வைத்து சூதாடும் அளவுக்கு போதையாக்கியுள்ளது என்பதை அறியலாம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த ஓராண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது ஒரு தற்கொலை முயற்சியும் நடந்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை என்றால், மக்களைக் காக்க அரசுக்கு மனம் இல்லையா? என்ற வினா எழுகிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இன்றுடன் 90 நாட்களாகி விட்டன. அமைச்சரவையில் இரு முறை விவாதிக்கப்பட்டாகிவிட்டது.  இனியும் தயக்கம் ஏன்?  இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Salem College student Attempt Suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->