இப்போ என்ன செய்ய போறிங்க? மத்திய, மாநில அரசுகளுக்கு அம்புமணி இராமதாஸ் கேள்வி!
Dr Anbumani Ramadoss Say About Tamil Fisherman arrest issue
தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது: தொடரும் இலங்கை அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு கட்டுப்படுத்தப் போகின்றன? என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை சிங்களப் படைகள் கைது செய்துள்ளன. அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களப் படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
காரைக்கால் கடற்கரையிலிருந்து மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் காற்றோட்டம் காரணமாக கோடியக்கரை பகுதியிலிருந்து கச்சத்தீவுக்கு அருகில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனாலும் கூட அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்லாத நிலையில் அவர்களை சிங்களப் படை சிறைபிடித்திருக்கிறது.
கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள ஏழாவது கைது இதுவாகும். இதுவரை மொத்தம் 60 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 22-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தாயகம் திரும்பும் முன்பே அடுத்த கைது அரங்கேறியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுடன் மீட்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையின் அத்துமீறல் இனியும் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Tamil Fisherman arrest issue