தமிழா, ஹிந்தியா? பாமகவின் நிலைப்பாடு என்ன?! வெட்டொன்னு, துண்டும் ஒன்னாக அன்புமணி இராமதாஸ் அதிரடி பதில்!
Dr Anbumani Ramadoss Say About Tamil Hindi Language issue palladam
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், பாமக சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், "ஹிந்தி பிரச்னையை எடுத்துக்கொண்டால் ஒருதரப்பு ஹிந்தி மொழி கற்பதில் தவறில்லை என்கிறார்கள். மற்றொரு தரப்பினர் ஹிந்தியை கடுமையாக எதிர்ப்போம் என்று கூறுகிறார்கள்.
பாமகவின் நிலைப்பாடு, இந்தியாவில் எனது அடையாளம் என்ன? நான் ஒரு தமிழன். எனது தாய்மொழி தமிழ். எனது அடையாளம் தமிழ். எனது அடையாளத்தை அகற்றி உங்களின் அடையாளத்தை திணித்தால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இது நியாயம் இல்லை.
ஹிந்தி படிங்கள், அது நீங்கள் வட இந்தியாவுக்கு சென்றால் உதவும் என்று கூறுங்கள். அதனை திணித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஹிந்தி 22 அலுவல் மொழிகளில் ஒன்று அவ்வளவே. இந்தியாவில் தேசிய மொழி என்பது இல்லை. 22 அலுவல் மொழிகள் மட்டுமே உள்ளன.
இதில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிசி, போஜ்பூரி, குஜராத்தி என பல மொழிகள் உள்ளன. ஹிந்தியை கட்டாயப்படுத்தி கொண்டு வருவது சரியில்லை.
இங்கு எதிர்த்தால் விலக்கிக் கொள்கிறார்கள். பின்னர் வேறுவிதமாக அதனை கொண்டு வந்துள்ளார்கள். நாடாளுமன்ற நிலைக்குழு, இணைப்பு மொழியில் ஹிந்தியை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரை கொடுத்துள்ளது. இதுவும் தவறான போக்கு.
தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர் மத்திய பிரதேசம், ஒடிசா சென்று படித்தால் அவர் கட்டாயம் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா? அங்கே சமாளிக்க முடியவில்லை என்றால் அவன் கற்றுக்கொள்வான். அதனை திணிக்க வேண்டாம்.
பொதுமொழியை கற்றுக்கொள்வது தவறு இல்லை. அதனை திணிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அதுவே எங்களின் நிலைப்பாடு.
53 துறைகள் தமிழகத்தில் உள்ளன. ஒரு துறைக்கு ஒருநாள் என வைத்துக்கொண்டாலும் 53 நாட்கள் சட்டப்பேரவையில் பேச வேண்டும். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாளில் விவாதங்கள் இன்றி 12 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். நாம் சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து, விவாதித்து மக்களுக்கு தேவையானதை நிறைவேற்ற வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Tamil Hindi Language issue palladam