இன்றைய கோவையின் வளர்ச்சி - 'தென் கைலாயம்'த்தின் வீழ்ச்சி - 100 ஆண்டுகால வரலாற்றை எடுத்துரைத்த அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


"நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்" என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் மற்றும் கொங்கு பகுதி சமூகத் தொண்டு அமைப்புகள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ஆற்றிய சிறப்புரையில், "மான்செஸ்டர் ஆப் இந்தியா என்று நாம் சொல்வது கோயம்புத்தூர். அது நமக்கு பெருமையாக இருக்கும். ஆனால் அந்த காலத்தில் இது போன்ற ஒரு பெயரை உருவாக்குவதற்கு என்ன செய்தார்கள்? அந்நேரம் மின்சாரம் கிடையாது நீராவி மூலமாகத்தான் அன்றைய காலத்தில் தொழிற்சாலைகள் இயங்கின. இதற்கு தேவையான மரங்களை வெள்ளியங்கிரி மலையில் இருந்த காடுகளை அழித்து தான் எடுத்தார்கள்.

அப்படி உருவாகியதுதான் கோயம்புத்தூர் என்ற நகரம். அன்று ஆரம்பித்தது இன்று அழிவில் நிற்கிறது. அடுத்த பிரச்சனை செங்கல் சூளை, இங்கே இருக்கின்ற அசோக் கூட செங்கல் சூளையை எதிர்த்ததால் சிறைக்கு சென்றார். அதன் பிறகு நீதிமன்றம் மூலம் இந்த பகுதியில் இருக்கின்ற செங்கல் சூளைகளை மூட உத்தரவு வாங்கியுள்ளோம்.

செங்கல் சூளைகள் எங்கிருந்து வந்தது. அதே வெள்ளியங்கிரி மலையில் இருந்துதான். வெள்ளியங்கிரி மலையில் 7 உச்சிகள் இருக்கும். அது ஒரு புனிதமான மலை. 'தென் கைலாயம்' என்று அந்த வெள்ளியங்கிரி மலையை அழைப்பார்கள். அப்படிப்பட்ட புனிதமான, மூலிகைகள் நிறைந்த மலையில் இன்று ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இந்த மலைப்பகுதியில் ஆங்காங்கே சுனைகள் இருக்கும். இன்று கூட நீங்கள் பார்த்தால் மலை அடிவாரத்தில் நொய்யல் ஆறு நன்றாக இருக்கும். அவ்வளவு சுத்தமான தண்ணீராக இருக்கும். ஆனால் வெள்ளியங்கிரி மலையிலிருந்து 20 கிலோமீட்டர் வந்த பிறகுதான் இந்த பிரச்சனை தொடங்குகிறது. பேரூர் என்ற ஊருக்கு பிறகு தான் இவ்வளவு பிரச்சனையும் தொடங்குகிறது.

கூவம் என்றால் நாம் மூக்கை பிடிப்போம், முகத்தை சுழிப்போம். ஆனால் எத்தனை பேருக்கு தெரியும். திருவள்ளூர் அருகே உள்ள கூவம் எனும் கிராமத்திலிருந்து தான் இந்த கூவம் நதி தொடங்குகிறது. அங்கிருந்து சென்னைக்கு 72 கிலோமீட்டர் பயணித்து நேப்பியர் பாலத்தில் முடிகிறது கூவம் நதி.

இன்றும் இந்த கூவம் நதியின் முதல் 60 கிலோ மீட்டர் தண்ணீரை குடிக்கலாம், விவசாயம் செய்யலாம். இந்த கூவம் நதி எப்போது சென்னையின் நுழைவாயிலை தொடுகிறதோ அது முதல் சாக்கடையாக மாறுகிறது. அந்த கூவம் நதியை சரி செய்வதற்காக எத்தனையோ அரசுகள், எத்தனையோ ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறார்கள். 

அதே போல் தான் நொய்யல் ஆறும் ஆரம்பத்தில் தூய்மையான நீராகத்தான் வருகிறது. நொய்யல் ஆற்றை நம் நான்கு கட்டங்களாக பிரித்து கொள்வோம்.
மலையடிவாரத்தில் இருந்து பேரூர் வரை ஒரு கட்டம், பேரூர் முதல் சாம்பலாபுரம் ஏரி வரை இரண்டாவது கட்டம், சாம்பலாபுரம் ஏரி முதல் ஒரத்தப்பாளையம் அணை வரை மூன்றாவது கட்டம், ஒரத்தப்பாளையம் அணையில் இருந்து காவிரியில் சேருகின்ற கிராமமான நொய்யல் வரை நான்காவது கட்டம். கரூர் மாவட்டத்தில் இருக்கின்ற அந்த நொய்யல் கிராமத்தின் பெயர் தான் நொய்யல் ஆற்றுக்கு பெயராக வருகிறது.

இந்த நான்கு கட்டங்களில் முதல் கட்டம் நன்றாக இருக்கிறது. நான்காவது கட்டம் ஓரளவுக்கு பரவாயில்லை. மூன்றாவது கட்டம் தான் மாசுக்களில், கழிவுகளில் 90 சதவீதம் நொய்யல் ஆற்றை கெடுப்பது. இந்த மூன்றாவது கட்டமான சாம்பலாபுரம் ஏரி முதல் ஒரத்தப்பாளையம் அணை வரையும் உள்ள பகுதி தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? பிரச்சனையை மட்டும் நான் பேசுவதற்காக வரவில்லை. இந்த பிரச்சனைக்கான உண்டான தீர்வையும் சொல்ல வந்திருக்கிறேன். இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்" என்று அனபமணி இராமதாஸ் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About velliyangiri hills


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->