தலித் இளைஞரின் திடீர் கோரிக்கை... உடனே நிறைவேற்றிய பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!
Dr Anbumani Ramadoss Tribute to Annal Ambedkars statue
திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமங்களை நோக்கிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, திருத்தணி தொகுதியில் 60 இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாமக கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பயணத்தின் போது திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், முருகம்பட்டு கிராமத்தில் கொடியேற்ற பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சென்றார். அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவிக்க அழைத்தார். இளைஞரின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்ட அன்புமணி, அதே வேகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மாலை அணிவிக்க சென்ற அன்புமணிக்கு, அந்த சிலை சுவாரசியமான தகவல் ஒன்றை காட்டியது. ஆம், அச்சிலையை முருகம்பட்டு கிராமத்தில் தலீத் மக்கள் முன்னணியின் நிறுவனத் தலைவர், மறைந்த தங்கவயல் வாணிதாசன் முன்னிலையில், திறந்துவைத்தது பாமகவின் முதல் பொதுச்செயலாளரும், பாமகவின் முதல் மத்திய அமைச்சருமான தலீத். இரா. எழில்மலை என்பதை அச்சிலையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காட்டியது.
அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செய்த உடன், இந்த எளிய மனிதனின் அழைப்பை ஏற்று, சிறியவர் என்று கூட பார்க்கமால் உடனடியாக வந்த அண்ணன் அன்புமணிக்கு நன்றி என முழங்கினார் அந்த இளைஞர்.
தொடர்ந்து அப்பகுதி பட்டியிலின மக்களிடம் பேசிய அந்த இளைஞர், "அண்ணன் தான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வந்தார். இச்சிலையை திறந்து வைத்த தலீத் எழில்மலை அவர்களை, மத்திய அமைச்சராக்கி அதிகாரம் மறுக்கப்பட்ட சமூக மக்களின் பிரதிநிதியாக, அதிகாரமிக்க அமைச்சராக மக்கள் பணிசெய்ய வாய்ப்பளித்தவர் சமூகப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் தான். இந்தியாவிலேயே மருத்துவர் அய்யா அவர்கள் தான் ஒரே நாளில் ஏழு அம்பேத்கர் சிலைகளை அரியலூர் மாவட்டத்தில் திறந்து வைத்தார். மருத்துவர் அய்யா அவர்கள் தான்
வன்னியர் சங்கம் 1980இல் தொடங்கும் போது, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்படும் 18% இட ஒதுக்கீட்டை 22% உயர்த்த வேண்டும் என்றும், இந்த இரண்டு பெரும் சமூகங்களும் முன்னேற வேண்டும் என்றும் கோரிக்கையை அன்றே வைத்தார்.
அதிகாரம் மறுக்கப்பட்ட, உரிமைகள் சூறையாடப்பட்ட சமுதாயங்கள் இரண்டும் ஒற்றுமையாக முன்னேறினால் தான், தமிழகம் முன்னேறும் என்று அண்ணன் அன்புமணி அவர்கள் போகும் எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறார்" என்று அப்பகுதி மக்களிடம் அந்த இளைஞர் ஆவேசமாக பேசத் தொடங்கிவிட்டார். பின்னர் அந்த இளைஞரின் நன்றியை ஏற்றுக்கொண்ட அன்புமணி, அங்கிருந்த மக்களை சந்தித்துவிட்டு விடைபெற்றார்.
இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, சில தினங்களுக்கு முன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கேவி குப்பம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசை அவரில்லத்தில் சந்தித்து, தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பானது இரு சமூகங்களுக்கிடைய ஒற்றுமையை, சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான சந்திப்பாகவே பார்க்கப்பட்டது. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே, பட்டியலின இளைஞர் ஒருவர் தாமாக முன்வந்து அன்புமணியை அழைத்ததும், அன்புமணி மறுக்காமல் சென்றதும் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது போன்ற ஒரு அரசியல் சூழல் தான் அமைய வேண்டும் என நாங்கள் விரும்பினோம், இரண்டு சமூகங்களும் இணைந்து செயல்பட துவங்கினால், வட தமிழகத்தில் பாமக வலுவான கட்சியாக உருவெடுக்கும் என மகிழ்ச்சியுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள்.
English Summary
Dr Anbumani Ramadoss Tribute to Annal Ambedkars statue