ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை தவிர்த்த டாக்டர் ராமதாஸ்! வெளியான தகவல்கள்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடெங்கும் சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் பசுமைத் தாயகம் அமைப்பினர் இன்று ஈடுபட்டனர்.  நவம்பர் 18 ஆம் தேதி சாலை விபத்துகளில் கொலை செய்யப்படுவோர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகிலேயே மிக அதிகமான சாலைவிபத்துகள் நடக்கும் நாடு இந்தியா! 2017 ஆம் ஆண்டில் 4,64,910 சாலை விபத்துகள் நடந்தன. அவற்றில் கொலை செய்யப்பட்டோர் 1,47,913 பேர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் மிக அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் முதல் மாநிலம் தமிழகம்! இங்கு 2017 ஆம் ஆண்டில் 65,562 சாலைவிபத்துகள் நடந்தன. அவற்றில் கொலை செய்யப்பட்டோர் 16,157 பேர்.  இந்தியாவில் மிக அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் முதல் மாநகரம் சென்னை. இங்கு 2017 ஆம் ஆண்டில் 7,257 சாலை விபத்துகள் நடந்தன. அவற்றில் கொலை செய்யப்பட்டோர் 1,264 பேர் எனவும்  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்த இந்திய அரசின் ரகசிய ஆய்வறிக்கையில், சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டதால் மிகப்பெரிய நன்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

டாக்டர் இராமதாசு  அவர்களால் உருவாக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சார்பில், அவரது ஆலோசனையின் பேரில் வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் எல்லைக்குள் உள்ள மதுக்கடைகளை 2017 ஏப்ரல் மாதம் முதல் மூட இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடுமுழுவதும் சுமார் ஒரு லட்சம் மதுக்கடைகள் மூடப்பட்டன அல்லது இடம் மாற்றப்பட்டன.

இதன் விளைவாக இந்தியா முழுவதும் ஒரே ஆண்டில் ஒன்றரை லட்சம் சாலை விபத்துகள் குறைந்தன. 2872 சாலை விபத்து மரணங்கள் குறைந்தன. சாலை விபத்து கொலைகள் ஆண்டுதோரும் அதிகரித்து செல்லும் விகிதத்துடன் இதனை ஒப்பிட்டால் - உண்மையில் சுமார் 7500 உயிரிழப்புகள் ஒரே ஆண்டில் தடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் குறித்து குறிப்பிடும் மத்திய அரசின் அறிக்கை, 'கடந்த ஆண்டில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் புதிய சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்த மாற்றத்துக்கு நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்டது மட்டுமே ஒரே காரணம்' என்கிறது! 

இதே காலத்தில் தமிழ்நாட்டில் 1061 சாலைவிபத்து மரணங்கள் குறைந்தன. சாலைவிபத்து கொலைகள் ஆண்டுதோரும் அதிகரித்து செல்லும் விகிதத்துடன் இதனை ஒப்பிட்டால் - உண்மையில் தமிழ்நாட்டில் சுமார் 2600 உயிரிழப்புகள் ஒரே ஆண்டில் தடுக்கப்பட்டுள்ளன.  இந்த மாபெரும் சாதனையை செய்தவர் டாக்டர் ராமதாசின் சட்ட நடவடிக்கைகளால் சாத்தியமானது என்றால் மிகையாகாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DR Ramadoss save more numbers from accident died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->