பாமகவின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - டாக்டர் இராமதாஸ்!
Dr Ramadoss say about pongal sugar cane
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது: கரும்புகள் வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி 2.19 கோடி அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகுப்புடன் பொங்கல் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததை முதன் முதலில் சுட்டிக்காட்டி, அதையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்தியது நான் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியதன் நோக்கம் அரசை நம்பி கரும்பு சாகுபடி செய்த உழவர்கள் இழப்பை சந்திக்கக் கூடாது என்பதற்காகத் தான். தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் லட்சக்கணக்கான உழவர்கள் பயனடைவார்கள்!
பொங்கல் கரும்பு முழுக்க முழுக்க தமிழக விவசாயிகளிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும்; வெளிமாநிலங்களில் இருந்து வாங்கக் கூடாது. கொள்முதலில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.35 விலை வழங்கப்பட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss say about pongal sugar cane