உண்ணாவிரத போராட்டம், 6 பேருக்கு மருத்துவ சிகிச்சை -  தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal



ஊதிய முரண்பாட்டை களையக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் மயக்கம் : ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ளார் செய்திக்குறிப்பில், "ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் 6 பேர் இன்று காலை மயங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது!

31.05.2009வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது 01.06.2009  முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இது நியாயமல்ல!

அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை  ஏற்க முடியாது. இந்த பாகுபாட்டை போக்க வேண்டியது அரசின் கடமை!

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருமுறை அவர்கள் உண்ணாநிலை இருந்த போது அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இப்போதாவது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Teachers Protest 1222


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->