கடலூர் | பெரியப்பட்டு சாயக்கழிவு ஆலைக்கு மக்கள் 100% எதிர்ப்பு - திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


மக்களின் உணர்வுகளை மதித்து பெரியப்பட்டு சாயக்கழிவு ஆலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு பகுதியில் சாயக்கழிவு ஆலை அமைப்பது குறித்து புவனகிரி வட்டாட்சியர் தலைமையில் இன்று கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களின் பிரதிநிதிகளும் முழுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 

ஜவுளிப் பூங்கா (SIMA #Textile Processing Park) என்ற பெயரில், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொண்டு வந்து, தண்ணீரைக் கலந்து கடலில் விடுவதுதான் இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம் ஆகும்.

ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சிகளின் பிரதிநிதிகள், பசுமைத் தாயகம், மக்கள் வாழ்வாதார அமைப்பு, மீனவ கிராங்களின் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு 100% எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு முழுமையாக கைவிட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Stop SIMA Pollution Cuddalore Environmental Racism


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->