திமுகவின் அத்துமீறல்கள்! தமிழகத்தில் சட்ட ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு? - இராமதாஸ் காட்டம்! - Seithipunal
Seithipunal


தைலாபுரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தைலாபுரத் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் பேசுகையில், விக்கிரவாண்டி இடை தேர்தலில் திமுகவின் அத்துமீறல்களையும், தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தையும் கடந்து பாமக வெற்றி பெறும்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் அரசியல் படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு என கேட்கும் நிலை உருவாகியுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை உள்துறை மற்றும் காவல்துறையினருடன் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் காவல் அதிகாரிதான் பொறுப்பு என அறிவிக்க வேண்டும். மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கப்பியாம்புலியூரில் திமுகவின் கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.

டிஎஸ்பி ஒருவர் பாமகவினர் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். காவல்துறையின் திமுகவினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும்தாண்டி பாமக 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss wins the Vikravandi by election by a margin of 25000 votes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->