இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal



குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள ஜக்தீப் தன்கரின் பணி சிறக்க வாழ்த்துகள் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சுமார் நான்கில் மூன்று பங்கு வாக்குகளைப் பெற்று 14&ஆவது குடியரசுத் துணைத் தலைவராக  ஜக்தீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 

அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுனராக அண்மைக்காலம் வரை பணியாற்றி வந்த ஜக்தீப் தன்கர், உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும், மத்திய அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றியவர். சிறந்த சோசலிச சிந்தனை கொண்டவர். 

அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை நன்கு அறிந்தவர். குடியரசுத் துணைத் தலைவர் பதவியுடன், மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பையும் நிர்வகிக்கும் கடமையும் அவருக்கு உள்ளது. 

கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் அவர் அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட மேற்கொள்ளவும், அனைத்து வகைகளிலும் சிறப்பாக பணியாற்றவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று, மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 528 வாக்குகளுடன் வெற்றி பெற்று இந்தியாவின் 14-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் ஜக்தீப் தன்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வகைகளிலும் அவரது பணி சிறக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramodoss Wish New Vice President


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->