ஆரியத்திற்கு முன்னோடி திராவிடம்!....ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி! - Seithipunal
Seithipunal



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, சர் ஜான் மார்ஷல் அவர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை  மாற்றி வடிவமைத்தார். ஜான் மார்ஷல் அவர்களது பங்களிப்பை நன்றிப்பெருக்குடன் பின்னோக்கி அவருக்கு இந்நாளில் நன்றி கூறுகிறேன்.

சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானத்துடன் அதனை அவர் திராவிட இனத்துடன் தொடர்புபடுத்தியதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், திராவிட மொழி பேசும் மக்கள் ஆரியத்திற்கு முன்னோடி என நூறாண்டுக்கு முன் உலகிற்கு சொன்னவர் ஜான் மார்ஷல் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கண்டுபிடிப்பு  நூற்றாண்டினை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்குடனும், சர் ஜான் மார்ஷல் அவர்களின் முழுவுருவச் சிலையினைத் தமிழ்நாட்டில் நிறுவியும் கொண்டாடப்படும் என்று திமுக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dravidian forerunner to Aryan Chief Minister M. K. Stalin thanks John Marshall


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->