"மதுக் குடிப்பது உடலுக்கும், குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும்" - காந்தி வேடமணிந்து மக்களுக்கு விளக்கி கூறும் குடும்பம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் தனது மனைவி மற்றும் மகளுடன் பயணம் செய்து காந்தியின் கொள்கையை மக்களிடம் விளக்கி வருகிறார் நாகராஜன். 

சென்னையில் உள்ள  புளியந்தோப்பு குட்டி தம்பிரான் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 55). இவர், மகாத்மா காந்தியை போல் வேடமணிந்து பொதுமக்களிடம் அவரது கொள்கைகள் குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறார்.

இவர் தமிழகத்தில்  மட்டுமல்லாமல் ஆந்திரா முழுவதும் தனது குடும்பத்தினருடன்  பயணம் செய்து காந்தியின் கொள்கையை பற்றி முழுவதுமாக  மக்களிடம் விளக்கி வருகிறார். 

இந்தநிலையில், நேற்று புளியந்தோப்பு, கொடுங்கையூர் பகுதியில் உள்ள மதுக்கடையின்  முன்பு காந்தி வேடமணிந்த நாகராஜன் தனது குடும்பத்தினருடன் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

அங்கு வந்த மதுபிரியவர்களிடம், இரு கைகளையும் கூப்பி வணங்கி, "மது குடிப்பது உடலுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும். எனவே அதனை விட்டுவிடுங்கள்" என்று பணிவுடனும், பற்றுடனும்  கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drinking alcohol is harmful to the body Gandhi disguised family explaining


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->