நிலத்தை அபகரிக்கும் பாஜக நிர்வாகி.. ரவுண்டு கட்டிய டாக்டர்..!! - Seithipunal
Seithipunal


புதிய தமிழம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனி வடக்கு காடு என்று அழைக்கப்படக்கூடிய காராமணி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சின்னையன் என்ற சின்னச்சாமி என்பவரது புதல்வர்கள் கண்ணையன், கிருஷ்ணன் ஆவர். காலமான சின்ன சாமி அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட 6 1/2 ஏக்கர் நிலத்தில் அவரது புதல்வர்கள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர். அது மலை அடிவாரத்தில் உள்ள நல்ல வளமான நிலமாகும். வறட்சி காலங்களிலும் வற்றாத கிணற்று பாசனம் உண்டு. கண்ணையன் திருமணமானவர்; அவருக்குக் குழந்தைகள் எவரும் இல்லை. கிருஷ்ணனுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உண்டு; ஒருவர் மும்பையில் இருக்கிறார்.

 மற்றொருவர் சேலம் அருகே இரைச்சிபாளையத்தில் வசித்து வருகிறார்; மற்ற இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. கிருஷ்ணன், கண்ணையன் ஆகிய இருவரும் 70 வயதிற்கு மேற்பட்டவர் என்பதாலும், வேறு எவரும் அவர்கள் குடும்பத்தில் அந்த நிலத்தில் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாததாலும் இவர்களுடைய நிலத்திற்கு அருகாமையில் இருக்கும் சேலம் இரும்பாலைப் பகுதியிலிருந்து குடியேறிய குணசேகரன் என்ற நபர் இவர்களுடைய நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க எண்ணியிருக்கிறார். ஆனால், கண்ணையனும், கிருஷ்ணனும் அந்த நிலத்தை விற்பதற்கு முன்வரவில்லை.
மேலும், குணசேகரன் என்பவர் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், ஏற்கனவே இதே போல தனக்கு நிலத்தை விற்க முன்வராத ஒருவரைக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர். பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் கிரிமினல் பின்னணியைத் தவறாகப் பயன்படுத்தி, கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோருடைய நிலத்தை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்ற தீய நோக்கில் தொடர்ந்து பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.


கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் நிலத்தை விற்க மறுத்திடவே, அவர்கள் ரூபாய் ஒரு லட்சத்தை குணசேகரன் இடத்தில் பணம் பெற்றதாக ஒரு போலி பத்திரத்தை தயார் செய்து, அதற்கு இறந்து போன பக்கத்து வயல்காரர் ஒருவரையும் சாட்சியாகத் தயார் செய்து, தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொடுக்காத பணத்தைக் கொடுத்ததாகக் கூறி அதைக் கேட்டுத் தொடர்ந்து முதியவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அது மட்டும் இன்றி கடந்த நான்கு வருடங்களாக அந்த நிலத்தின் உரிமையாளர்களான கிருஷ்ணனும் கண்ணையனும் அவர்களது நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத அளவிற்குத் தொடர்ந்து அடியாட்களைப் பயன்படுத்தி, அதற்குத் துணையாக யார் வரினும் அவர்களையும் அச்சுறுத்தி வந்தது தெளிவாகத் தெரிகிறது. 6 1/2 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தும் அதில் விவசாயம் செய்ய முடியாமல் ரேஷன் அரிசியையே நம்பியே வாழ வேண்டிய அவலநிலை இருக்கிறது. எனவே சேலம் மாவட்ட வருவாய்த் துறையும், காவல்துறையும் தயவு தாட்சண்யமின்றி குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrKrishnasamy strongly condemned BJP executive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->