தங்கள் உடலை தாங்களே ’தீ’க்கு பலி கொடுத்தும் மொழிப்போர் வீரர்கள் செய்த தியாகங்கள் ஈடு இணையற்றவை - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


மொழிப்போர் தியாகிகளின் தீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திகுப்பில், "தாய்மொழியாம் தமிழை அழிக்கும் நோக்குடன் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து பல கட்டங்களில் போராடி உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நாள் இன்று. அவர்களின் தியாகங்களை இந்த நாளில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் போற்ற வேண்டும்.

அன்னை மொழியைக் காக்கும் போராட்டத்தில் சிறைபட்டு,வாட்டி வதைத்த நோய்க்கு மருத்துவம் பெறாமலும், தங்கள் உடலை தாங்களே ’தீ’க்கு பலி கொடுத்தும் மொழிப்போர் வீரர்கள் செய்த தியாகங்கள் ஈடு இணையற்றவை. அவற்றை எந்த நாளிலும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றுக்கு எதிரான நமது போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே  தான் இருக்கின்றன. அன்னை தமிழை காக்க எந்த தியாகத்தையும் செய்ய நாம் உறுதியேற்போம்"

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Say About MartyrsDay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->