யார் அந்த சார்! ஞானசேகரன் பேசியது உண்மை! அடித்து கூறிய மாணவி! அதிரவைக்கும் புலனாய்வு விசாரணை! - Seithipunal
Seithipunal



சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், "சார்" என்று யாரையோ தொலைபேசியில் பேசும் போது குறிப்பிட்டதாக தெரிவித்தது, இதற்க்கு பின்னல் பெரும் புள்ளி யாரோ இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.

மேலும், அதிமுக, பாமக,பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் "யார் அந்த சார்?" என்று கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில்,  "சார்" என்று யாரும் இல்லை, மாணவி விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது என ஆளும் கட்சியான திமுக தரப்பில் பதில் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை தாமே முன்வந்து விசாரணை செய்த உயர்நீதிமன்றம்  சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறப்பு விசாரணைக்குழுவிடம் மாணவி தெரிவித்துள்ள தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு "மிரட்டிவிட்டு வந்துவிடுவேன்" என பேசியதாக மாணவி குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக, 4 முறைக்கு மேல் ஞானசேகரன் வேறு ஒரு சாரிடமும் இருக்க வேண்டும் தன்னை மிரட்டியதாக மாணவி உறுதிபட தெரிவித்துள்ளார். 

மேலும், விசாரணைக்குழுவின் ஆய்வில் ஞானசேகரனின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீடியோக்களில் இடம்பெற்ற பெண்கள் மற்றும் மாணவிகளை விசாரணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University Harassment  shocking info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->