கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றுவது தான் பாஜக - வின் வேலை - துரை வைகோ பேச்சு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார் துரை வைகோ. இவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது, "நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் நடத்தப்படுவது இல்லை என்று திராவிட இயக்கங்களான நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

என்னைக் கேட்டால் நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என்று தான் கூறுவேன். பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடையாது. கூட்டணி தயவில் தான் அக்கட்சி இப்போது ஆட்சி அமைக்கிறது. ஒரு நிர்பந்தத்திற்காகவே பல கட்சிகள் அந்த கூட்டணியில் உள்ளன. பாஜக எப்போதும்  மற்றவர்கள் கட்சியை உடைத்து தான்  ஆட்சியை பிடிக்கும். 

தற்போது மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதால் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து கட்சிகளையும் அமலாக்கத்துறை சோதனைக்கு உட்படுத்தும். கட்சியை உடைத்து அக்கட்சிகளின் மக்களவை உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலைகளை செய்யும். இது தான் பாஜகவின் குணம். 

இந்த ஆட்சி ஐந்தாண்டுகளுக்கு நீடிக்காது என்பது என் கருத்து. ஆட்சியை தக்க வைப்பதற்காக மிரட்டல், அமலாக்கத்துறை சோதனை என்று அனைத்தையும் பாஜக செய்யும். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ள பாஜக, தமிழகத்திற்கு தேவையான நிதியையும், நலத்த்திட்டங்களையும் மேற்கொள்ளுமா என்பது சந்தேகம் தான். 

நிதி ஒதுக்கினால் தான் திட்டங்களை செயல்படுத்த முடியும். எனவே என்னால் முடிந்ததை நான் நிச்சயம் செய்வேன்" என்று துரை வைகோ கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Durai Vaiko Speaks About BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->